web log free
March 25, 2026

இருவரின் விளக்கமறியலும் 22 வரை நீடிப்பு

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோரின் விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இருவரையும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான்  இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல்கள் அறிந்தும் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd