உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறித்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் இடம்பெறும் சி.ஐ.டி. விசாரணைகளில் முக்கிய மான நால்வர் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரிடம் விசாரித்து வாக்கு மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு சட்ட மா அதிபர் விசாரணையாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு, கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் நேற்று(18) விசாரணைக்கு வந்த போதே, பிரதி சொலிச்சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் மேற்படி விடயத்தை அறிவித்தார்.
இந் நிலையில் குற்றவியல் பொறுப்பு சாட்டப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்ட போதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.