அதிகாரபகிர்வு, சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. அது, பிரச்சினைக்கு தீர்வாகது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ள நிலையில், அதுதான் தீர்வாக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அதிகாரப்பகிர்வின் ஊடாகத்தான் இலங்கை மக்களுடைய இனப்பிரச்சினைக்காக தீர்வு எட்டப்படும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஏம்.எ சுமந்திரன் தெரிவித்தார்.
இன்று யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள அவரது வாஸ்தலத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் மேலும் கருத்து தெரிவித்த அவர், அதிகாரப்பகிர்வு என்பது பெரும்பான்மை மக்கள் இணங்கித்தான் சிறுபான்மை மக்களுக்கு கொடுப்பது என்பது அல்ல.
நாட்டுக்குள்ளே அரச அதிகாரங்கள் மக்களிடம் பகிரப்பாடமை குறித்த இடத்தில் இருக்குமானால் அது பெரும்பான்மை சமூகத்திற்கு சாதகமான இருக்கும். பெரும்பான்மை சமூக இருக்கும் இடத்தில் ஜனநாயகம் சரியாக செயற்பட முடியாது.
ஆகையினால் அதிகாரப் பகிர்வு பகிரப்பட வேண்டும். வெவ்வெறு பிராந்திய ரீதியாக அதிகாரங்கள் பகிரப்பட்டு கொண்டு எண்ணிக்கையிலே பெரும்பான்மை, சிறுபாண்மை என்ற ரீதியினை விளக்குகின்ற முழுமையான ஜனநாயகத்தினை அமுல்படுத்துகின்ற முறைதான் அதிகார பகிர்வு முறை அதனைத்தான் சமஸ்டி என்று கூறுவார்கள்.
அதனை பெரும்பான்மையினர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பது எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.