web log free
July 04, 2025

சம்பிக்கவை அழைத்துவந்தனர்- நீதிமன்றில் சலசலப்பு

முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (19) முற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க, நேற்று (18) மாலை கைது செய்யப்பட்டு இன்று (19) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 

சட்டமா அதிபரினால் கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட ஆலோசனையின் படி முன்னாள் அமைச்சர் கைதுசெய்யப்பட்டதுடன், நேற்று இரவு,  கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

நீதிமன்ற வளாகத்தில் பெருந்திரளான மக்கள் கூடிய இருப்பதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதே​வேளை, சம்பிக்கவை நேற்றிரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, ஊடகவியலாளர்களை உள்ளே செல்ல அனுமதியளிக்கவில்லை. இதனால் பெரும் வாக்குவாதமும் ஏற்பட்டது.

Last modified on Friday, 20 December 2019 03:25
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd