முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர்களுக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று, சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மைத்திரிபால சிறிசேன, இவ்விருவரையும் தனிதனியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி உடனான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அதேவேளை, பிரதமர் உடனான சந்திப்பானது அலரிமாளிகையில் நடைபெற்றது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொதுவான சின்னத்தில் போட்டியிடுவது பற்றி இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இறுதி முடிவு இந்த இரண்டு சந்திப்புக்களிலும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இன்னும் சில தினங்களுக்கு பின்னர் மீண்டும் சந்தித்து பேச்சு நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.