பொலன்னறுவை- மட்டக்களப்பு பிரதான வீதியில் மன்னம்பிட்டிய மற்றும் கல்லெல்லவுக்கு இடையிலான பிரதேசம் வெள்ளத்தினால் மூழ்கியிருந்த போது, அவ்வழியில் பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதியும், அந்த பஸ்ஸின் சாரதியை வழிநடத்திய நடத்துனரும் எதிர்வரும் 27ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவ்விருவரும் பொலன்னறுவை பதில் நீதவான் சந்தியா குணசேகரவின் முன்னிலையில், நேற்று (21) ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கவனக்குறைவாக பஸ்ஸை செலுத்திச் சென்றமை, மற்றும் கவனக்குறை செயற்பாட்டினால் ரணத்தை ஏற்படுத்துவதற்கு முயன்றமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழே இவ்விருவருக்கும் எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.
தனியார் பஸ் சாரதியும் நடத்துனருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பஸ், பொலன்னறுவை கல்லேல்லையில் 54 பயணிகளுடன் வெள்ளத்தில், சிக்கிக்கொண்டது. பாதுகாப்பு படையினர், பொதுமக்களின் பெரும் முயற்சியினால் பஸ், மீட்கப்பட்டது. அதில், சின்னக் குழுந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், வயோதிப பெண்களும் இருந்தனர்.