web log free
February 02, 2026

நத்தார் தாத்தா வேடமிட்டிருந்தார் ராஜித

கிறிஸ்மஸ் தினத்தன்று நத்தார் தாத்தா போன்று ஆடை அணிந்து ராஜித யாருக்கும் தெரியாமல் வைத்தியசாலைக்கு சென்று அனுமதிக்கப்பட்டதாக அறியமுடிகிறது.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வீட்டில் மறைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ராஜித வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் சந்திரிக்காவின் வீட்டிலேயே பதுங்கியிருந்ததாக சிங்கள அமைப்பு ஒன்று குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட குறித்த அமைப்பின் தலைவர் ஜம்புரேவெல சந்தரத்ன தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

கிறிஸ்மஸ் தினத்தன்று நத்தார் தாத்தா போன்று ஆடை அணிந்து ராஜித யாருக்கும் தெரியாமல் வைத்தியசாலைக்கு சென்று அனுமதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுவரை சந்திரிக்காவின் டொரின்டன் வீட்டிலேயே ராஜித தங்கியிருந்தார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Last modified on Monday, 30 December 2019 00:11
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd