தானாகவே கேட்டு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு சிறைக்குச் சென்று அங்கு தங்கியிருந்து விட்டு வருமாறு, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதினுக்கு அவரது கட்சியின் மூத்த உறுப்பினரும், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். அமீர் அலி அறிவுரை வழங்கியுள்ளார் என அறியமுடிகின்து.
ரிசாத் பதியூதீனை சிறையில் அடைக்கவேண்டும் என பேரினவாதிகளில் சிலரும் பௌத்த பிக்குகள் சிலரும் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், ரிசாத் பதியூதீனை நேற்றுமாலை அவரது வீட்டில் சந்தித்துள்ள அமீர் அலி, பேரினவாதிகளின் விருப்பத்தின் பிரகாரம், இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு, கேட்டுவாங்கி, சிறைக்குச் சென்று தங்கியிருந்துவிட்டு வருமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதனை கேட்ட ரிசாத் பதியூதீன், பொருமையாக இருக்குமாறு அமீர் அலிக்கு அலோசனை வழங்கியுள்ளார் என அறியமுடிகிறது.