முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கைது செய்யுமாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஒருவரை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் அவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வண. அக்மீமன தயாரத்ன தேரரே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவரை தன்னுடைய டொரிங்டன் வீட்டில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மறைத்து வைத்துள்ளார் என்றும் தயாரத்ன தேரர் தெரிவித்தார்.
இதேவேளை, சந்திரிகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில், அமைப்புகள் பல, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடுகளை செய்வதற்கு தயாராகி வருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.