தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவின் ஊட்டிக்குச் சென்றிருக்கும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, இன்று (29) நாடு திரும்பவுள்ளார்.
இந்நிலையில், இன்றும் நாளையும் முக்கிய கூட்டங்களை அவர் நடத்தவுள்ளார்.
டிசம்பர் 31 ஆம் திகதியுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் பதவிக்காலம் நிறைவடைகிறது.
அதனடிப்படையில் புதிய உறுப்பினர்கள் செயற்குழுவுக்கு சேர்த்துகொள்ளப்படவுள்ளனர். அதுதொடர்பிலான பேச்சுவார்த்தைகளே, இந்த இரண்டு நாட்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இரு நாள்களிலும் நடத்தப்படும் முக்கியமான கூட்டங்களில் பங்கேற்குமாறு, கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளத,
கட்சியின் தலைமைக்கு இருக்கும் அதிகாரங்களின் பிரகாரம், புதிய உறுப்பினர்கள் செயற்குழுவில் சேர்த்துகொள்ளப்படவுள்ளனர்.
அவ்வாறாயின், சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவானவர்கள், செயற்குழுவிலிருந்து விலக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரவிக்கின்றன.