- மாத்தளை- உக்குவளை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்.
தாய், தந்தை, மருமகள் ஆகிய மூவருமே இச்சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.
நேற்றிரவு 10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பன்றிக்கு வைத்த சட்டவிரோத மின்சார பொறியில் சிக்கியே குறித்த மூவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
- சுவிஸ் பணியாளர் ஆஜர்
இலங்கையிலுள்ள சுவிஸ் தூதுவராலயத்தில் கடமையாற்றிய, உள்ளூர் பணிப்பாளர் கார்னியா பன்னிஸ்டர் பிரான்சிஸ், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
- தண்ணீரில் விழுந்த இந்தியர் பத்திரமாய் மீட்பு
2019 டிசம்பர் 27 ஆம் திகதி நுவரெலியாவில் உள்ள கிரிகெரி ஏரியில் ‘Jet Ski’ சவாரி செய்யும் போது தண்ணீரில் விழுந்த இரு இந்தியர்களையும் இலங்கையர்களையும் இலங்கை கடற்படை மீட்டுள்ளது.
நுவரெலியாவில் உள்ள கிரிகெரி ஏரியில் விளையாடிக் கொண்டிருந்த போது படகு கவிழ்ந்ததில் ஒரு இலங்கை நாட்டவரும், இந்திய நாட்டைச் சேர்ந்தவரும் காயமடைந்தனர்.
கிரிகோரி ஏரியைச் சுற்றி இருந்த இலங்கை கடற்படையின் விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவில் (4RU) இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் குழுவால் இந்த இருவரும் பாதுகாப்பாக மீட்டனர்.
- சீரான வானிலை தொடரும்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
- வவுனியா விபத்தில் 10 பேர் காயம்
தங்கலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துகொண்டிருந்த தனியார் பஸ், வவுனியா, இரட்டப்பெரியகுளம் குருதுபிட்டி பிரதேசத்தில், பாய்ந்து விபத்துக்குள்ளானதில், 10 பேர் காயமடைந்துள்ளனர்.
கட்டுப்படுத்த முடியாத வேகத்தினால், பஸ் இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது என விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது