web log free
October 18, 2024

படங்களை பகிர்ந்த இலங்கையருக்கு டுபாயில் சிறை

இனையத்தளங்களில் படங்களை தரவேற்றம் செய்ததுடன், அப்படங்களை தங்களுக்கு இடையில் பகிர்ந்துகொண்ட, இலங்கையைச் சேர்ந்த மூன்று இளைஞர்களுக்கு டுபாய் நீதிமன்றத்தினால், சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

இவர்கள் மூவரும் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான புகைக்கபடங்கள் மற்றும் வீடியோக்களை இனையத்தளங்களில் தரவேற்றம் செய்துவிட்டு, அதனை பகிர்ந்துள்ளனர் .

உயிர்த்த ஞாயிறன்று மட்டக்களப்பு தேவாலயத்தில் இடம்பெற்ற தாக்குதலில் டுபாய் தேசிய பாதுகாப்பு அதிகாரியின் உறவினரின் பிள்ளைகள் இருவர், மரணமடைந்துவிட்டனர். எனக் கூறியே இந்த மூவரும் படங்களை தரவேற்றம் செய்துள்ளனர்.

எனினும், அந்த பிள்ளைகள் இருவரும் உயிருடனேயே இருந்துள்ளனர். இதனால் மனவேதனையடைந்த டுபாய் தேசிய பாதுகாப்பு அதிகாரி செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த மூவரும் கைதுசெய்யப்பட்டனர். 

அவர்களுக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. அவர்களுக்கு முதலில் 8 இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது. அதனை செலுத்த தவறியதால், சிறைதண்டனை விதிக்கப்பட்டது. 

 

டுபாய் நீதிமன்றத்தினால், மஹவெல- தொடுவாவே வசிப்படமாகக் கொண்ட ரமேஸ் பெர்னாந்து, அவரின் நண்பர்களான காலியை வசிப்பிடமாகக் கொண்ட விஷ்வ டி சில்வா மற்றும் மட்டக்களப்பை வசிப்பிடமாகக் கொண்ட குணதாஸ் டிரோன் ஆகியோருக்கே இவ்வாறு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

டுபாய் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தண்டப்பணத்தை செலுத்தாமையால், அந்த மூவருக்கு தலா மூன்றரை வருடங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.