ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியில், சபை முதல்வர் மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் சபை முதல்வராக அமைச்சர் தினேஷ் குணவர்தனவும், ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், நாளை ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக அமைச்சர் மஹிந்த அமரவீர நியமிக்கப்படுவார் என ஏற்கெனவே கதைகள் அடிப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த நியமனத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என, சுதந்திரக் கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.