web log free
October 30, 2025

சீனாவுக்கு முன் கோத்தாவுக்கு மோடி கோல்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 14ஆம் திகதி, சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் தொலைபேசியில் தொடர்புகொண்டு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதாக இந்திய பிரதமர் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

இந்திய பிரதமரின் வாழ்த்துக்களை இலங்கை ஜனாதிபதி மிகவும் வரவேற்றுள்ளதாகவும், இரு நாடுகளுக்குமிடையிலான உறவு மலர்ந்துள்ள புது வருடத்தில் பலமடையும் என இரு நாட்டு தலைவர்களும் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சீனாவுக்கு செல்லும் முன் இவ்வாறு வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியல் ரீதியில், ஒரு செய்தியை சொல்லியுள்ளது என அறியமுடிகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd