web log free
April 09, 2026

சாட்டையை அணியேன்- ​கோத்தா

ஹம்பாந்தோட்டையில் அரசியல் குடும்பமான எனது குடும்பத்தில், நான் அரசியல் ரீதியில் பிரவேசிக்கவில்லை. இராணுவ சேவையிலும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் பதவிவகித்தேன். மக்களின் துன்பங்களை நான் அறிவேன் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

என்னுடைய குடும்பத்தினர், அணியும் சாட்டைக்கு ஓர் அர்த்தம் உள்ளது. அதனால் குடும்ப உறுப்பினர்கள் சாட்டையை அணிகின்றனர். ஆனால், நான் அந்த சாட்டையை அணியமாட்டேன். ஆனால், அந்த சாட்டையால் முன்னெடுக்கப்படவேண்டிய பணியை முன்னெடுப்​பேன் என்றார்.

பாராளுமன்றத்தை கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து, தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, டைக்கோட் அணிந்து வந்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd