web log free
June 24, 2026

“கோத்தா-சஜித் பொருத்தம் நல்லது”

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு மஹிந்த ராஜபக்ஷ பொருத்தமானவர் அல்லர். அவருக்கு சஜித் பிரேமதாஸவை பொருத்தமானவர். ஆகையால், சஜித் பிரேமதாஸவை எதிர்வரும் பொதுத் தேர்தலில், பிரதமராக தெரிவு செய்வோம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 

ஐக்கிய தேசியக் கட்சி, இம்முறை தேர்தலில் “ஜனாதிபதி கோத்தா, சஜித் பிரதமர்” எனும் தொனிப்பொருளிலேயே பிரசாரங்களை முன்னெடுக்கவுள்ளது என்றும் அவர் கூறினார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd