web log free
May 09, 2025

வயிற்றை கலக்கும் 12 தண்டனைகள் இதோ

சட்டத்தையும் ஒழுங்கையும் மேம்படுத்த பல்வேறு சட்ட ஒழுங்குகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் 12 சட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சட்டங்கள் உடனடியாக அமுல்படுத்தப்படின் நாட்டு மக்கள் எதிர்நோக்கும் நீண்டகால பிணக்குகளுக்கு உடனடி தீர்வு கிடைக்குமென நம்பப்படுகின்றது.

1. குடி போதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்பட்டால் 10 வருட கடூழிய சிறை.

2. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி செய்வது முற்றாக இன்று முதல் தடை.

3.பாடசாலை அனுமதியின் போது நேரடியாகவோ மறைமுகமாகவோ லஞ்சம் கோரப்பட்டால் 48 மணித்தியாலத்திற்குள் பணி நீக்கம் செய்யப்படுவர்.

4. பகிடிவதை செய்து சிக்கினால் 8 வருடம் பரீட்சை எழுத தடை விதிக்கப்படும்.

5. பாராளுமன்ற உறுப்பினர் 80% மேல் அமர்வுகளில் சமூகமளித்திருத்தல் வேண்டும் .தவறினால் 5 வருடங்களுக்கு எந்த வித வாக்கெடுப்பிற்கும் விண்ணப்பிக்க முடியாது.

6. அரச ஊழியர்கள் சேவை துஸ்பிரயோகம் செய்தால் 48 மணி நேரத்திற்குள் பணி நீக்கம் செய்யப்படுவர்.

7. ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் போட்டியிட்டு 1% வீதத்திற்கு குறைவான வாக்குகளை பெருவாரேயானால் 1கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு தண்டப்பணமாக செழுத்த வேண்டும்.

8. அரசியல்வாதிகளின் சிபாரிசின் மூலம் வருபவர்களுக்கு வாழ் நாள் முழுதும் அரச சேவையில் இணையத்தடை.

9. வைத்தியரின் சிபாரிசு இல்லாமல் மருந்து வழங்கும் மருந்தகங்களில் அனுமதிப்பத்திரம் 48 மணித்தியாலத்திற்குள் ரத்து செய்யப்படும்.

10. சொத்துக்களை வாங்கி 5 வருடங்களுக்கு முன் விற்பனை செய்யப்பட்டால் விற்கப்படும் தொகையில் 50% வரியாக செழுத்தப்பட வேண்டும்.

11. மோட்டார் வாகன பொலிசார் இரகசிய பொலிசாரால் கண்காணிக்கப்படுவர்.சிக்கினால் 48 மணி நேரத்திற்குள் பணி நீக்கம்.

12. தனியார் வைத்தியசாலைகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படும்.

இவை அனைத்தையும் மக்களோடு மக்களாக இருக்கும் 2500 இரகசிய பொலிசார் அவதானிப்பர்.

Last modified on Monday, 06 January 2020 02:15
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd