web log free
October 18, 2024

குட்டையை குழப்பினார் ரணில்-திமிறினார் சஜித்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் மீண்டும் உட்கட்சி மோதல்கள் ஆரம்பித்துள்ளன.

காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கயந்த கருணாதிலக்க நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிப் பிரதம கொறடாவாக நியமிக்கப்பட்டமையிட்டு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பெரும்பாலான உறுப்பினர்கள் கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளியிட்டிருக்கின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்கவே பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவை எதிர்கட்சிப் பிரதம கொறடாவாக நியமிப்பதற்கான நடவடிக்கையை எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கொண்டிருந்தார்.

எனினும் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைச் சட்டங்களை நன்கு அறிந்துவைத்திருக்கும், அரசாங்கத்திற்கு எதிராக பலமான போராட்டங்களையும், அரசியல் செயற்பாடுகளையும் வகித்துவருகின்ற களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி அஜித் பி பெரேராவை எதிர்கட்சிப் பிரதம கொறடாவாக நியமிப்பதற்கான உத்தேசத்தையே ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.