web log free
June 27, 2026

வீட்டை உடைத்து பெண்ணை தாக்கியோர் கைது


எப்.முபாரக்

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றினை உடைத்து பெண்ணொருவரை தாக்கினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில், நால்வரை கைது செய்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நல்லூர்,தோப்பூர்,பகுதியைச் சேர்ந்த 27,22,49,மற்றும் 36 வயதுடைய நால்வரே நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பூர் பகுதியில் பெண்ணொருவர் வடி சாராயம் விற்பனைச் செய்வதாக கூறி சந்தேக நபர்கள் நால்வரும், அப்பெண்ணின் வீட்டை உடைத்து அப்பெண்ணை, தாக்கியுள்ளனர் என முறைப்பாடு செய்யப்பட்டது.

அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்தே, நால்வரும் கைதுசெய்யப்பட்டனர். சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண், மூதூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd