web log free
October 18, 2024

சந்திரிகாவுக்கு அவசரம்: பூச்செண்டுடன் பறந்தார்

 

தனது தந்தையின் ஞாபகார்த்த தின வைபவத்துக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தன்னை அழைக்கவில்லை என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டப்ளியு.ஆர்.டீ பண்டாரநாயக்கவின் 121ஆவது சிரார்த்த தினம் இன்றாகும்.

இதனை முன்னிட்டு, காலி முகத்திடலுள்ள பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கு சந்திரிகாவும் அவருடைய சகோதரியான சுனேத்திரா பண்டாரநாயக்கவும் இன்றுகாலை 8 மணிக்கு முன்னர் பூச்செண்டை, வைத்தனர்.

இந்நிலையில், அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்கள், பண்டாரநாயக்கவின் சிறார்த்த தின ஏற்பாடுகளை, சுதந்திரக் கட்சி முன்னெடுத்துள்ளது. அந்த வைபவம் இன்றுகாலை 8.30க்கு நடைபெறவிருந்தது. இந்நிலையில், அந்த நேரத்துக்கு முன்பே வந்து, மலர்செண்டை வைத்தது ஏன் என கேட்டனர்.

சிரார்த்த தினம் தன்னுடைய தந்தைக்​கே செய்யப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும், வழமையாகவே நான் பூச்செண்டை வைப்பேன். இம்முறையும் வைத்துள்ளேன். இம்முறை வைபவத்துக்கு சுதந்திரக் கட்சி தன்னை அழைக்கவில்லை என கடிந்துகொண்டார்.  

இந்நிலையில், சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்கு சந்திரிகா பண்டாரநாயக்க நேற்று (07) சென்றிருந்த போது, பெரும் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

சந்திரிகா பண்டாரநாயக்க இன்றையதினம், காலிமுகத்திடலுக்கு வந்திருந்த போது, சுதந்திரக் கட்சியின் சிரேஷ் உறுப்பினர்கள் எவரும் சமூகமளித்திருக்கவில்லை.