web log free
July 02, 2025

வடக்கிற்கு வருமாறு ரஜினிக்கு சி.வி அழைப்பு

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், நடிகர் ரஜினி காந்துக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஜினிகாந்தின் சென்னை இல்லத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

இந்த சந்திப்பின் போது இலங்கையின் வட பகுதிக்கு விஜயம் செய்யுமாறு விக்னேஸ்வரன், ரஜினி காந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் இந்த சந்திப்பில் இலங்கை தமிழர்கள் குறித்த பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக இருவரும் கலந்துரையாடியதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் ஆரம்பமான ஆறாம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக சி.வி.விக்னேஸ்வரன் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd