web log free
May 09, 2025

அதிரடியாக அறிவித்தார் பசில்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ,  அதிரடியான அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். 

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அடுத்த பொதுத் தேர்தலில் தான் களமிறங்கு விவகாரம் தொடர்பில் தயாராக இருப்பதாகவும் அதற்காக, jனது அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்வதற்கு தீர்மானித்து நடவடிக்கைகளை எடுதுள்ளார் என இலத்திரனியல் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் முதலாவது வாரத்தில் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்குச் சென்ற காரணம், அமெரிக்காவிலுள்ள தனது குடியுரிமையை இரத்துச் செய்வதற்காக எனவும் தெரியவருகின்றது.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் பசில் ராஜபக்ஷ போட்டியிடத் தயாராக இருப்பதனாலேயே அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்கின்றார் என மேலும் தெரியவருகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd