web log free
May 09, 2025

படைப்புழு பற்றி விளக்கம்

 

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பயிர்ச்செய்கையில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள படைப்புழுவின் தாக்கம் மற்றும் அதனைக் கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து விளக்கமளிக்கும் உயர்மட்ட மாநாடு மட்டக்களப்பு - கரடியனாறு விவசாய பயிற்சிப் பண்ணையில் மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே. சிவநாதன் தலைமையில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் விவசாய திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம். ஹுஸைன், பூச்சியியலாளர் எஸ்.ஆர். சரத்சந்திர, விவசாய ஆராய்ச்சி திணைக்கள அதிகாரி எல்.கே.எஸ்.பீ. குமார ஆகியோர் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.

கிழக்கு மாகாணத்தில் சோளப் பயிர்ச் செய்கையில் அம்பாறை மாவட்டத்திலேயே படைப்புழுவின் தாக்கம் அதிகம் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட 12 ஆயிரத்து 850 ஹெக்டேயரில் 8035 ஹெக்டேயர் பாதிக்கப்பட்டுள்ளது.

இது 62.5 சதவீதமாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட 967 ஹெக்டேயரில் 476 ஹெக்டேயர் பாதிக்கப்பட்டுள்ளது. இது 50 சதமான பாதிப்பாகும்

திருகோணமலை மாவட்டத்தில் 780 ஹெக்டேயரில் சோளன் பயிரிடப்பட்டது. இதில் 594 ஹெக்டேயர் பாதிக்கப்பட்டுள்ளது' என்று விளக்கமளிக்கும் மாநாட்டில் விவரம் தெரிவிக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு உயர்மட்ட மாநாட்டில் விவசாயத் திணைக்களம், கமநல திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் போன்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர். ‪

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd