web log free
May 09, 2025

மனைவியின் தங்கை துஷ்பிரயோகம்


திருகோணமலை, கிண்ணியாவில் மனைவியின் தங்கையை ஒருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய நபரைரொருவரை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க, இன்று(27) உத்தரவிட்டார்.

நடுவூற்று, கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,

மனைவியின் சொந்த பத்து வயதுடைய தங்கையான சிறுமியை மனைவி வெளியில், மற்றும் பயணங்கள் சென்றவுடன் சிறுமியுடன், சந்தேகநபர் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் இச் துஷ்பிரயோக நடவடிக்கைகள் நீண்ட காலமாக நடைபெற்று வந்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

கணவன் மேல் மனைவிக்கு ஏற்பட்ட சந்தேகம் மற்றும் கருத்து முரண்பாடுகள் காரணமாக, பொலிஸாருக்கு மனைவி வழங்கிய தகவலின் அடிப்படையில், அவரது கணவனை கைது செய்து பொலிஸார், திருகோணமலை நீதிமன்ற நீதிவான் வாசஸ்தலம் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

மனைவியின் தங்கை வைத்திய பரிசோதனைக்காக கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd