உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பிரதான மூளையாளராக செயற்பட்ட தற்கொலை தாரியான மொஹமட் சஹ்ரானின், சகோதரனான மொஹமட் ரில்வானை பார்வையிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
2017 ஆம் ஆண்டு, குண்டுவெடிப்பில் காயமடைந்த மொஹமட் ரில்வானை, தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன்போதே, வைத்தியசாலைக்கு சென்று ஹக்கீம் பார்வையிட்டார்.
நோயாளியை பார்வையிட சென்றமை தொடர்பில், ஹக்கீமிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு, நீதிமன்றத்தில் கடந்த 17ஆம் திகதியன்று அறிக்கையிட்டிருந்தது.
காத்தான்குடியில், 2017ஆம் ஆண்டு குண்டொன்றை பொருத்தி பரிட்சித்து பார்த்துகொண்டிருந்த போது, மொஹமட் ரில்வானை காயமடைந்தார். அவரை ஹக்கீம் பார்வையிட சென்றிருந்தார். அது புகைப்படத்துடன் கூடிய சாட்சியாக உள்ளது.
ஹக்கீம் பார்வையிட சென்றமை தொடர்பிலான ஒளிப்படக் காட்சிகள் தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்பாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த வீடியோ காட்சிகளை, பொலிஸாருக்கு கையளிக்குமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.