web log free
April 07, 2026

ராஜிதவுக்கு கடும் உத்தரவு

எதிர்வரும்  மார்ச் மாதம்  05ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (21) உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன், வெள்ளை வேன் பற்றிய ஊடக சந்திப்பு தொடர்பான வழங்கில் கொழும்பு பிரதான நீதவான் வழங்கிய பிணை உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மீளாய்வு மனு தொடர்பான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள போதுமான காரணங்கள் உள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதன்படி, குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எதிர்வரும் மார்ச் மாதம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு ராஜிதவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd