'போதையிலிருந்து விடுதலையான நாடு' என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் போதைப் பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் உத்தரதேவியின் பயணத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆரம்பித்துவைத்தார்.
கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை, அந்த ரயில் தனது பயணத்தை தொடர்ந்து, அந்த ரயிலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மருதானை வரையிலும் பயணித்தார்.
இந்தியாவினால் வழங்கப்பட்ட அதிநவீன பெட்டிகளை கொண்ட, இந்த ரயில், கிளிநொச்சி அறிவியல் நகருக்கு சென்றடைந்தபோது, அங்குள்ள உப- ரயில் நிலையத்தை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க திறந்துவைத்தார்.
யாழ்ப்பாணத்தை சென்றடைந்த போது, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.