web log free
May 09, 2025

மைத்திரியின் தம்பியின் வெற்றிடத்துக்கு ரொஹான்

ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் தலைவராக ரொஹான் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தேயிலை வர்த்தகத்தில் முன்னோடியாக திகழ்ந்து வர்த்தகத்துறையில் பெயர்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் சகோதரர் குமாரசிங்க பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர், பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுகமவின் மருமகனும் வருனி அமுனுகமவின் கணவரும் ஆவார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd