web log free
July 01, 2025

சம்பந்தனுக்கு விட்டுக்கொடுத்தார் கோத்தா

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா சம்பந்தன் தற்போது தங்கியுள்ள அரச வாசஸ்தலத்தில் தொடர்ந்து தங்க அனுமதியளிப்பதென அமைச்சரவை இன்று தீர்மானித்தது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடந்தது. இதன்போது இந்த விடயம் குறித்து பொதுநிர்வாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் பணியாற்றியசமயம் வழங்கப்பட்ட இந்த அரச வாசஸ்தலம் அவருக்கு இப்போதும் வழங்கப்பட்டிருப்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளதால் அரசு இது விடயத்தில் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டுமென இதன்போது பேசப்பட்டது.

எவ்வாறாயினும் கட்சித் தலைவர் மற்றும் அவரின் வயதை கருத்திற்கொண்டு இந்த வாசஸ்தலத்தில் தொடர்ந்து சம்பந்தன்  வசிக்க அனுமதியளிப்பதென அமைச்சரவை தீர்மானித்தது.

அதேபோல அவருக்குரிய இதர வசதிகளிலும் மாற்றங்களை செய்வதில்லையென அமைச்சரவை தீர்மானித்தது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd