web log free
May 09, 2025

ஆணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

வயிற்றுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆணொருவர் குழந்தை பிரசவித்தார்.

தனது அடையாள அட்டை மற்றும் ஆவணங்கள் சகிதம் மாத்தறை வைத்தியசாலைக்கு சென்ற ஆணொருவர் தனக்கு வயிற்றில் வலி இருப்பதாக தெரிவித்ததையடுத்து அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க மருத்துவர்கள் தீர்மானித்தனர்.

வயிற்றுவலி அதிகமானதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஆண் போல நடித்த பெண் என்பதை கண்டறிந்து அவரை பிரசவ விடுதிக்கு அனுப்பினர் .இதனையடுத்து ஆண்குழந்தை ஒன்று அவருக்கு பிறந்துள்ளது.

26 வயதுடைய தெவிநுவர பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு ஆண் போல வேடமிட்டு வந்தவரென்றும் நீண்ட நாள் இவர் அப்பகுதியில் ஓட்டோ சாரதியாக தொழில் செய்து வந்தவரென்றும் தெரியவந்துள்ளது.

அந்த செய்தியைக் கேட்டு, அந்த நபரின் நண்பர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள், வைத்தியசாலைக்கு படையெடுத்தனர். இதனால், வைத்தியசாலையிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பெரும் பரபரப்பான நிலைமையொன்று, நேற்று (22) மாலை ஏற்பட்டிருந்தது.

எவ்வாறெனினும், குழந்தைக்கு பால்கொடுப்பதற்கு அவரிடம் மார்பகங்கள் இல்லை. அதனையடுத்து, வைத்தியசாலை பணியாளர்கள், பால்மாவை கலக்கி அக்குழந்தைக்கு கொடுப்பதற்கு ஆரம்பித்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd