web log free
April 15, 2026

தேரருக்கு சிங்கபூரில் சிகிச்சை


கங்காராம விஹாரையின் பிரதான தேரர், வண. கலபொட ஞானிஸ்சர தேரர், பொடி ஹாமதுருவோ, சிங்கபூரிலுள்ள எலிசெபத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடைய நிலைமை சற்று மோசமாக இருப்பதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன என, செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அமைச்சரும், அலரிமாளிகையின் பிரதானியுமான சாகல ரத்னாயக்கவை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிங்கபூருக்கு அனுப்பியுள்ள அதேவேளை, சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

மிகவும் செல்வாக்குமிக்க பௌத்த தேரர்களில் ஒருவரான அவர், சிலகாலம் நோய்வாய்பட்டிருந்த நிலையில், கொழும்பில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd