ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதும் இறுதி நேரத்தில் காலவரையின்றி அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேபோல ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை கோரும் சஜித்தின் முயற்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிந்தது.
தனது அரசியல் எதிர்காலம் குறித்து சஜித் பிரேமதாஸ பெற்ற சோதிட ஆலோசனைகளின் பிரகாரம் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்த சூழ்நிலையில் அதனை மீண்டும் சஜித்துக்கு வழங்க கட்சித் தலைவர் ரணில் தீர்மானித்துள்ளார் .