web log free
April 07, 2026

நீதிபதி கிஹான் கைதாகும் சாத்தியம்

 பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடிய மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பின்னணியில் அவர் கைது செய்யப்படும் சாத்தியம் எழுந்துள்ளதாக உயர்மட்ட நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேற்படி நீதிபதியை கைதுசெய்வதற்கான பிடியாணையை நீதிமன்றத்தில் பெறுமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதால் எந்நேரத்திலும் நீதிபதி கைது செய்யப்படலாமென அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd