web log free
February 02, 2026

ஐ.தே.க 6 பேர் மஹிந்தவுடன் சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் ஆறுபேர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பு, அரைமணி நேரம் இடம்பெற்றுள்ளது. 

இதில், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளின் முக்கியஸ்தர்கள் சிலரும் அடங்கியிருந்தனர் என அறியமுடிகின்றது.

இந்த சந்திப்பில் எவ்வாறான விடயங்கள் பேசப்பட்டன என்பது தொடர்பிலான தகவல்கள் வெளியாகவில்லை. 

அதுமட்டுமன்றி, ஊவா மாகாணத்தை சேர்ந்த முக்கியஸ்தரும், தென் மாகாணத்தை சேர்ந்த மிக முக்கிய புள்ளியும் அந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தார் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Last modified on Saturday, 25 January 2020 14:28
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd