web log free
May 09, 2025

நடிகை சேஜல் ஷர்மா தற்கொலை

பிரபல இந்தி சின்னத்திரை நடிகை சேஜல் ஷர்மா தற்கொலை செய்துகொண்டுள்ளார். மும்பையில் அவர் தங்கியிருந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் சேஜல் ஷர்மா.

உத்யபூரைச் சேர்ந்த சேஜல் ஷர்மா, தில் தோ ஹாப்பி ஹை ஜி என்கிற இந்தி மெகாதொடரின் மூலம் பிரபலமானவர். சில விளம்பரப்படங்களிலும், ஆஸாத் பரிந்தே என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். நவம்பர் மாதத்தில் இவரது தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு உடல்நலம் குன்றியது.

ஏற்கனவே புற்றுநோய் பாதிப்புடையவர் அவர். எனவே இரண்டு மாதங்களாக இதுபற்றி கவலையில் மன அழுத்தம் உண்டானதே சேஜலின் முடிவுக்குக் காரணமாக இருக்கும் என சக நடிகர் நிர்பய் கூறியுள்ளார்.

தனது இந்த தற்கொலை முடிவுக்குத் தனிப்பட்ட விஷயங்களே காரணம் என சேஜல் எழுதி வைத்துள்ள குறிப்பை போலீஸார் கண்டெடுத்துள்ளனர். போஸ்ட் மார்ட்டம் முடிந்து சேஜலின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சேஜலின் திடீர் மரணத்துக்கு சக நடிகர்களும், சின்னத்திரை கலைஞர்கள் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர். அவரது இந்த முடிவை நம்பமுடியவில்லை என்றும், அதிர்ச்சி தருவதாக இருப்பதாகவும் சேஜலின் சின்னத்திரை நண்பர்கள் கூறியுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd