கூடைப்பந்து சாம்பியனும் ஒலிம்பிக் வீரருமான கோப் பிரையண்ட் லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகர் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 13 வயது மகளுடன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
5 முறை என்பிஏ சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற பிரையண்ட் எப்போதும் ஹெலிகாப்டரில் பயணம் செய்வதையே வாடிக்கையாக கொண்டிருந்தார். சிக்ரோஸ்கி எஸ் 76 ஹெலிகாப்டரை அவர் பயன்படுத்தி வந்தார்.
இந்த விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகர் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் கோப் பிரையண்ட், அவரது மகள் கியானா உள்பட 9 பேர் பலியாகிவிட்டனர்.
தமது 20 ஆண்டு விளையாட்டு அனுபவத்தில் அவர் மிகப் பெரிய ஸ்கோர்களை எடுத்திருந்தார். சனிக்கிழமைதான் இவர் லிபிரான் ஜேம்ஸ் என்ற மற்றொரு வீரரின் சாதனையை முறியடித்தார். கோப் பிரையண்ட் மரணச் செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இவருக்கு 41 வயதாகிறது. இவரது இறப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இது பயங்கரமான செய்தி என்றும் தெரிவித்துள்ளார்.