web log free
February 02, 2026

ரஜினி பறந்த விமானத்தில் கோளாறு: அவசரமாக தரையிறக்கம்

 

நடிகர் ரஜினி சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சென்னையில் மீண்டும் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கர்நாடக மாநிலம் பந்திப்பூரில் இன்று நடக்கும் மத்திய அரசின் விழாவில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து மைசூருக்கு விமானத்தில் இன்று காலை ரஜினி புறப்பட்டார். புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டத கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 48 பயணிகளுடன் சென்னையில் இருந்த மைசூருக்கு புறப்பட்ட விமானம் அவசரமாக மீண்டும் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

விமான கோளாறு சரி செய்யப்படுவதால் பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் 2 மணி நேரம் காத்திருக்கின்றனர். அது சிறிய ரக ட்ரூஜெட் விமானம் என சொல்லப்படுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd