'நாட்டின் சட்டத்தை எந்நாளும் கௌரவமளிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, இரகசியமான முறையில் அரசியலமைப்பையோ அல்லது அரசியலமைப்பின் திருத்தத்தையோ, கொண்டுவராது. சுகல கட்சிகளுடனும் கலந்துரையாடி, ஓர் இணக்கப்பாட்டை எட்டியதன் பின்னரே, கொண்டுவரும்' என, தபால் மற்றும் முஸ்லிம் விவகாரம் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.
கண்டி, அங்கும்பர நகரில் 405 ஆவது சதொச கிளையை திறந்துவைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,
'அரசியலமைப்பு தொடர்பில் எவ்விதமான திட்டங்களையும் கொண்டிருக்காத சில பிரிவினர்கள், அரசியலமைப்பு கொண்டுவரபடவிருப்பதாகக் தெரிவித்து, மக்களை ஏமாற்றி வருகின்றது'என்றார்.