குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.
ரணிலின் வீட்டிற்கு சென்ற விசாரணைக்குழு இந்த வாக்குமூலம் பெற்றதாகவும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கைகளை ரணில் அறிந்திருந்தாரா என்பது பற்றி அவரிடம் தீர விசாரிக்கப்பட்டதாகவும் அறியமுடிந்தது.
இதேவேளை, கடந்த ஆட்சியில் பிரதமராக தாம் பதவி வகித்தாலும் முக்கியமான பாதுகாப்பு கூட்டங்களில் தாம் பங்குகொள்ளவில்லையெனவும், மைத்ரிபால சிறிசேனவே அவற்றை நேரடியாக கையாண்டாரெனவும் ரணில் இந்த விசாரணைகளின்போது கூறியுள்ளதாக அறியமுடிந்தது.