web log free
May 22, 2026

சினமன் குண்டுவெடிப்பு- 6 பேருக்கு விளக்கமறியல்

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தெமட்டகொடையை சேர்ந்த இப்ராஹிம் ஹாஜியார் உள்ளிட்ட சந்தேகநபர்கள் ஆறு பேரையும் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா ஜயதுங்க உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தாரியான இல்ஹாம் மொஹமட்டின் தந்தையான இப்ராஹிம் ஹாஜியார் உள்ளிட்ட ஆறுபேருக்கு எதிரான விசாரணை இன்னும் முன்னெடுக்கப்படுகின்றது என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர், நீதிமன்றத்தில் அறுவுறுத்தியமைக்கு அமைவாகவே இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd