web log free
April 09, 2026

2 கோழிகளை காப்பாற்ற முயன்ற 3 பேர் பலி

 

கைவிடப்பட்ட குழியொன்றில் விழுந்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவிசாவளை – சீதாவக்க பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குழியொன்றில் விழுந்திருந்த இரண்டு கோழிகளை காப்பாற்ற முனைந்த நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

 17, 27 மற்றும் 25 வயதுடையவர்களே உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் சடலங்கள் அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd