web log free
July 01, 2025

யோகிபாபுக்கு திடீர் யோகமடித்தது

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் யோகிபாபு திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வந்த நிலையில் அண்மையில் மஞ்சு பார்கவி என்ற பெண் யோகிபாபுவுக்கு நிச்சயிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது.

இதன்படி இன்று (05) காலை யோகிபாபு-மஞ்சுபார்கவி திருமணம் யோகிபாபுவின் குலதெய்வம் கோவிலில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர் 

மேலும் யோகி பாபு-மஞ்சு பார்கவி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் வரும் மார்ச் மாதம் நடைபெற இருப்பதாகவும், திருமண வரவேற்பு நடைபெறும் திகதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் யோகிபாபு தரப்பில் இருந்து கூறப்படுகிறது

யோகிபாபு-மஞ்சு பார்கவி திருமணம் என்று நடைபெற்றதை அடுத்து இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd