web log free
February 03, 2026

மார்ச் முதல் 1000 ரூபா: மஹிந்த சொன்னார்

தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு மார்ச் மாதம் முதல் அமுலுக்கு வருமெனவும் அதில் எந்த மாற்றங்களும் வராதென்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று சபையில் அறிவித்தார்.

தொழிலாளர் சம்பள அதிகரிப்பு குறித்து ஜே வி பியின் தலைவரும் எம்பியுமான அனுரா குமார திசாநாயக்க சபையில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பிரதமர் மேலும் கூறியதாவது ,

ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு குறித்து தோட்டங்களின் உரிமையாளர்களுடன் நடத்திய பேச்சுக்களின் அடிப்படையில் அந்த அதிகரிப்பு மார்ச் மாதம் முதல் அமுலாகும்.

இந்த அதிகரிப்பை வழங்க கம்பனிகள் இணங்கியுள்ளதால் தோட்டங்களை சுவீகரிக்கவேண்டிய அவசியம் அரசுக்கில்லை என்றார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd