web log free
September 04, 2025

'3 ஆவாக்கள் சிக்கின'


ஆவா குழுவின் உறுப்பினர்கள் மூவர், யாழ்ப்பாணத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பிரிவுக்குப் பொறுப்பான குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே, இந்த மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து வாள்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.

19,23 மற்றும் 25 ஆகிய வயதுகளை கொண்ட மேற்படி சந்தேகநபர்கள் மூவரும், யாழ்ப்பாணம் நாச்சியம்மன் கோவிலுக்கு அண்மையில், இரண்டு பேரை கடந்த 15ஆம் திகதியன்று வாளால் வெட்டி காயப்படுத்தியுள்ளனர என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த சம்பவத்துக்குப் பின்னர், பிரதேசத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாகியிருந்த நிலையிலேயே இந்த மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மூவரும், அடையாள அணிவகுப்புக்கு இன்று (28) உட்படுத்தப்படவுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd