இலங்கை பாராளுமன்றத்தில், 2018 ஆம் ஆண்டு, அரசியலமைப்பு சர்ச்சை ஏற்பட்டதையடுத்து, பாராளுமன்றத்துக்குள் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.
அதில், பைபில், கதிரைகளை எடுத்து வீசியமை, புத்தகங்களை வீசியெறிந்தமை, மிளகாய்த்தூள் தாக்குதல் உள்ளிட்டவை பிரதானமாகும்.
அவர்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் அச்சொட்டாக காண்பிடிக்கப்பட்டன
இதில், புத்தகங்களை தூக்கியெறிந்த விமல் வீரவன்ச அமைச்சராகியுள்ளார். பைபில், கதிரையை தூக்கி வீசி பெரும் ரகளையை ஏற்படுத்திய ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவிக்கு அப்பால், பாராளுமன்ற ஆளும் கட்சியின் பிரதான கொறடாவின் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கு முதன்முறையாக விஜயம் செய்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தூதுக்குழுவில், மிளகாய் தூள் வீசியெறிந்த, பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவும் அங்கம் வகிக்கின்றார். அது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கைலாகு கொடுக்கும் புகைப்படம், சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அதில், நீங்கள் லோக்க சபாவுக்கு வருகிறீர்களாக என மோடி கேட்பதாகவும், இங்கு மிளகாய் தூள் எவ்வளது என, சர்ச்சைக்குரிய அந்த உறுப்பினர் பிரசன்ன ரணவீர கேட்பதாகவும் கேலி செய்யப்பட்டுள்ளது.