web log free
February 03, 2026

இதயமா? யானை? சஜித்-ரணில் சர்ச்சை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பி​ரேமதாஸ தலைமையில் உருவாக்கவிருக்கும் புதிய கூட்டணியின் சின்னம் ​தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.

“இதயமே” சின்ன​ம் என சஜித் அணியினரும், “யானையே” சின்னமாக இருக்கவேண்டும் என ரணில் அணியினரும் முரண்டு பிடித்து கொண்டிருந்துள்ளனர்.

இதனால், ஐக்கிய தேசியக் கட்சியன் செயற்குழுவில் இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதங்கள் முற்றியமையால், சஜித் பிரேமதாஸ, இடைநடுவில் எழுந்து சென்றுவிட்டார்.

ரஞ்சித் மத்தும பண்டாரவை புதிய கூட்டணியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கு செயற்குழுவில் ஏகமனதாக அங்கிகாரம் அளிக்கப்பட்டாலும், தலைமைத்தும் மற்றும் செயலாளருக்கான முழுமையான அதிகாரம் வழக்கவேண்டும் என சஜித் வலியுறுத்தியுள்ளார்.

தன்னை வைத்துகொண்டு, பொம்மலாட்டம் ஆடுவதற்கு இனியும் இடமளிக்க மாட்டேன் என்று ரணிலிடம் கூறிவிட்டே, செயற்குழுவிலிருந்து சஜித் பிரேமதாஸ, இடைநடுவில் எழுந்து சென்றுவிட்டார்.

Last modified on Saturday, 15 February 2020 11:52
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd