web log free
May 09, 2025

மஹிந்தவின் ரூ.420 ரூபாய் கார்- சி.ஐ.டி விசாரணை

கடந்த ஆட்சியின் ​போது தனக்கு வழங்கப்பட்ட 420 இலட்சம் ரூபாய் பெறுமதியான மெர்சிடிஸ் பென்ஸ் கார் தொடர்பில், விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றுக்கு, அமைச்சர் மஹிந்த அமரவீர முறைப்பாட்டு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

கடந்த 10 வருடங்களாக பல்வேறான அமைச்சுப் பதவிகளை நான் வகித்துள்ளேன். எனினும், எவ்விதமான புதிய வாகனங்களையும் நான் வாங்கவில்லை. பயன்படுத்தவும் இல்லை என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுள்ளதன் பிரகாரம் அவ்வாறான வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தால், அது எந்த காலத்தில் கொள்வனவு செய்யப்பட்டது. அதனை பயன்படுத்தியோர் யார், என்பது தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்குமாறும் அந்த முறைப்பாட்டு கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd