web log free
June 27, 2026

12 கேட்டார் தப்புல

 

மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவும் ரஞ்சன் ராமநாயக்கவும் உரையாடிய 12 தொலைபேசி பதிவுகளை தனது பரிசீலனைக்காக சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவை பணித்துள்ளார்.

முன்னதாக ரஞ்சன் ராமநாயக்க எம் பி நீதிபதி கிஹானை அச்சுறுத்தியதாக முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக பதில் பொலிஸ் மா அதிபர் சட்ட மா அதிபருக்கு எழுத்துமூலம் அறிவித்திருந்த நிலையில் சட்ட மா அதிபர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நீதிபதி கிஹானை கைது செய்யக் கோரும் சட்ட மா அதிபர் அதனை பதில் பொலிஸ் மா அதிபர் இழுத்தடிப்பதாக கருதுவதால் இந்த உத்தரவை அதிரடியாக பிறப்பித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd