எதிர்வரும் பொதுத் தேர்தலில், தன்னுடைய கட்சி, சகல மாவட்டங்களிலும் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது என, ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தெரிவித்தார்.
காலியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பொதுத் தேர்தலில் தனது கட்சி களமிறங்குவதற்கு தீர்மானித்துவிட்டது.
மிகப்பெரிய கட்சிகளில் இணைந்து போட்டியிடுவதன் ஊடாக, அவ்வணியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பாராளுமன்றத்துக்கு செல்கின்றனர். 225 பேரையும் பார்த்தால் அவ்வாறனவர்களே உள்ளனர் என்றார்.
மக்களிடத்தில் மாற்றங்களை கொண்டுவரவேண்டும். ஆகையால், சகல மாவட்டங்களிலும் போட்டியிடுவதற்கு தீர்மானித்தோம் என்றார்.