ஐக்கிய தேசியக் கட்சியானது ” சமகி ஜன பலவேகய என்ற அரசியல் கூட்டணியில் அன்னப்பறவை சின்னத்தின் கீழ் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த கூட்டணியை வழிநடத்தவுள்ளார். இதயம் சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக சஜித் அணியினர் முன்னர் அறிவித்திருந்தனர்.
எனினும், யானையா? அன்னமா? இதயமா? என்பது தொடர்பில் தீர்மானிப்பதில் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.
இறுதியில், அன்னம் சின்னத்திலேயே போட்டியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. 2010 ஜனாதிபதி தேர்தலில், இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போட்டியிட்டார். அதன் பின்னர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன, 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.